Thursday, May 12, 2011
Wednesday, May 11, 2011
Photoshop ShortCut Key
போட்டோஷாப் மென்பொருளை விரைவாகவும் சிறப்புடனும் பயன்படுத்த Shortcut கீகள் தெரிந்திருப்பது நல்லது. போட்டோ ஷாப் பயன்படுத்துவோருக்கும் புதியவர்களுக்கும் உதவ ஆங்கிலத் தளம் ஒன்றில் கிடைத்த Photoshop ShortCut Key கொண்ட படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கீழே உள்ள கீபோர்ட் ஷார்ட் கட் படத்தை கிளிக் செய்தால் பெரிதாகும். அதனை சேவ் செய்து பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.
Saturday, May 7, 2011
'அபுட்டபாத்' தாக்குதல் : பிரபலமடையும் கிராபிக்ஸ் வீடியோ
அமெரிக்க படைகளால் ஒசாமா எவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாமென கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு உலாவவிடப்பட்டுள்ள ஓர் கற்பனை வீடியோ இது!
இந்த தாக்குதல் தொடர்பில் பல கிராபிக்ஸ் காட்சிகள் வெளிவந்துள்ள போதும் யூடியூப் நிர்வாகத்தினரால் அவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக குறிப்பு :
'Osama bin Laden Killed (Live Video)' : இப்படி எங்கு தோன்றினாலும் கிளிக் செய்யாதீர்கள் : வைரஸ் எச்சரிக்கை ஒசாமவின் பெயரில் புதிய வைரஸ் ஒன்று இணையத்தளத்தில் வேகமாக உலாவரத்தொடங்கியுள்ளது. Osama bin Laden Killed (Live Video) எனும் பெயருடன் Osama Bin Laden Death Video என இது காட்சிப்படுத்தப்படுகிறது. நீங்கள் அந்த காட்சிகளை பார்வையிட சொடுக்கியதும், யூடியூப் இதை ஒளிபரப்ப அனுமதிக்காததால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி அந்த வீடியோவை பாருங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து கிளிக் செய்வீர்களானால், Temporary Files ஆக உங்களது கணனிக்கு வந்துவிடுகிறது. பின் ஈமெயில் முகவரி கண்டுபிடித்து தானகவே நண்பர்களுக்கு அனுப்பத்தொடங்குகிறது.
'அபுட்டபாத்' தாக்குதல் : பிரபலமடையும் கிராபிக்ஸ் வீடியோஇந்த தாக்குதல் தொடர்பில் பல கிராபிக்ஸ் காட்சிகள் வெளிவந்துள்ள போதும் யூடியூப் நிர்வாகத்தினரால் அவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக குறிப்பு :
'Osama bin Laden Killed (Live Video)' : இப்படி எங்கு தோன்றினாலும் கிளிக் செய்யாதீர்கள் : வைரஸ் எச்சரிக்கை ஒசாமவின் பெயரில் புதிய வைரஸ் ஒன்று இணையத்தளத்தில் வேகமாக உலாவரத்தொடங்கியுள்ளது. Osama bin Laden Killed (Live Video) எனும் பெயருடன் Osama Bin Laden Death Video என இது காட்சிப்படுத்தப்படுகிறது. நீங்கள் அந்த காட்சிகளை பார்வையிட சொடுக்கியதும், யூடியூப் இதை ஒளிபரப்ப அனுமதிக்காததால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி அந்த வீடியோவை பாருங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து கிளிக் செய்வீர்களானால், Temporary Files ஆக உங்களது கணனிக்கு வந்துவிடுகிறது. பின் ஈமெயில் முகவரி கண்டுபிடித்து தானகவே நண்பர்களுக்கு அனுப்பத்தொடங்குகிறது.
எனவே இப்பெயரில் வரும் எந்தவொரு இணைப்பையும் சொடுக்கவேண்டாம் என இணையப்பதிவாளர்கள் வேண்டுகோள் விடுக்கிறேன்.
Thank you
Friday, May 6, 2011
அரசின் இலவசமும்,மின்வெட்டும்...
"பாஞ்சாலியை வைத்து சூதாடிய மகாபாரதத்து தருமன் போல்' மாநிலம் துகில் உரியப்படும் போது, கையாலாகாதவர்களாக கலங்கி நிற்கிறோம்.
தமிழகத்தில், தேவைகேற்ப மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவில்லை. நீண்டகால திட்டமிடல், தொலைநோக்கு பார்வை இல்லாததால், இன்று மின்வெட்டால் தவிக்கிறது தமிழகம்.
தற்போது, தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தி நிறுவுதிறன், 15 ஆயிரத்து 100 மெகாவாட். ஆனால், 8,000 முதல் 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. நமது தேவை தற்போது, 10 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. 1,500 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.மத்திய மின்துறை ஆய்வுப்படி, இன்னும் இரண்டு ஆண்டுகளில், 1,875 மெகாவாட் பற்றாக்குறை ஏற்படும். இந்த தேவையை சரிசெய்யவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதுவரையிலும் காற்றாலை மின் உற்பத்தியை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.
சென்னைவாசிகளைப்போல் தான் மாநிலத்தின் பிற பகுதிகளில் வசிப்போரும் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். ஆனால், சென்னையில் மட்டும் மின்வெட்டு ஒரு மணி நேரம் என்பது எந்த வகையில் நியாயம். அனைத்து பகுதி மக்களையும் ஒரே மாதிரியல்லவா அரசு நடத்த வேண்டும்.சென்னைவாசிகள் மட்டும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் போலவும், மற்ற மாவட்ட மக்கள் சாபம் பெற்றவர்கள் போலவும் நடத்தப்படுவது ஏன்? முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களுக்கு சிரமம் வரக்கூடாது என, சென்னையில் செய்து கொண்ட ஏற்பாடா இது? சென்னை நகர வாசிகளுக்கு மட்டும் தனியாக சட்டம் இயற்றியது போல் மின்வாரியம் செயல்படுகிறதே.இது, ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்தது போல் உள்ளது.
மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு, மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இலவச "டிவி', இலவச காஸ் என, கவர்ச்சி காட்டி வளர்ச்சியை முடக்கிவிட்டது.இதில் மக்களின் பங்கும் முக்கியம். நாம் இலவசத்திற்கு ஆசைப்பட்டதால் தான் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறோம். ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் தமிழகத்தை, பிற மாநிலங்களின் முன் தலைக்குனிய வைத்துள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட, தேர்தல் கமிஷனின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு, 100, 200 ரூபாய் என, பணம் வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆசைப்படுபவர்கள், வாக்காளர்களுக்கு தரும் 200 ரூபாய், நாள் ஒன்றுக்கு, 11 காசு என்ற கணக்கில் வருகிறது. காசை வாங்கிவிட்ட மக்கள், தங்களது உரிமைகளை எப்படி கேட்டுப்பெற முடியும்?
thankyou
Subscribe to:
Posts (Atom)












































Thank you
