Monday, May 2, 2011

மீடியாக்களின் மூளை சலவை

.ஒரு சினிமா நடிகனுக்கு உடல் நலக்குறைவு என்றால், அவன் வாந்தி எடுத்தால் உங்களுக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம்? ஒரு சினிமா நடிகன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஒருவரை சந்திக்கிறான் என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்? இவர்களைத்தவிர நாட்டில் வெறும் ஒன்றுமே நிகழ்வுகள் இல்லையா? ஒரு நடிகன் தன் ரசிகர் மன்றத்தை கலைதுவிட்டதாக கூறினால் அது மகா பெரிய செய்தி.சினிமாகாரர்கள் என்ன விண்ணில் இருந்து இறங்கிவந்த தேவ தூதர்களா? அவர்கள் மனித பிறவிகள் இல்லையா?  ஆணும் பெண்ணும் கலவியில் இணைந்து இந்த சினிமா காரர்களை பிள்ளைகளாக பெற்றுஎடுக்க வில்லையா? இவர்கள் எல்லாம் என்ன சுயம்புவா? இவர்கள் சாகா வரம் பெற்றுவந்த சிரஞ்சீவிகளா? ஒரு குறிப்பிட்ட நடிகனின் திரைப்படம் வெளிவர போகிறது என்றால் அதற்கு முன்பாகவே திட்டமிட்டு வித விதமான பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அந்த நடிகனை உச்சந்தலையில் வைத்து ஆடுவது ஏன்? காசு வரும் என்றால் எதையும் செய்வீர்களா? வடக்கில் ஆங்கில தினசரிகளும்,தொலைக்காட்சிகளும் மக்களுக்கு செய்யும் அதே கேடு கெட்ட வியாபார யுக்திகளை அப்படியே இந்த தெற்கு பகுதி ஊடகங்களும் பத்திரிகையும், தொலைக்காட்சிகளும் கொஞ்சமாம் மாறாமல் காப்பி அடித்து காசாக்கி மக்களை சுரண்டி பிழைகின்றீகளே ! இதில் தாங்கவொணாத பெருமைவேறு உங்களுக்கு!  ஹைடெக் சாமியார்களையும், ஹைடெக் விபசாரிகளையும் கொண்டாடி அவர்களை வளர்த்துவிடும் அனைத்து பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடங்களே! நீங்கள் மக்களுக்கு என்ன தருகிறீர்கள் என்பதில் கவனம் வேண்டாமா? உங்கள் சரக்கை அவர்களிடம் காசுக்கு விற்கும் நீங்கள், அவர்கள் உங்கள் சரக்கை என்றுமே வாங்கி அவைகளுக்கு மட்டும் அடிமையாக வேண்டும் என்ற எண்ணம் இன்றி வேறு நல்ல நோக்கம் உண்டா உங்களுக்கு? ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றால் சில தினங்களுக்கு முன்பு அந்த படத்தின் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு விளம்பரங்களாக வருவது இயல்பு. ஆனால் இப்போது வரும் படங்களுக்கு விளம்பர போஸ்டர் வெளியிடுவதே ஏதோ ஒரு நாட்டின் தேசிய விழா போல அல்லவா நடத்துகிறீர்கள்? இது வியாபார யுக்தியாம். பிளாக் எழுபவர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. பத்திரிக்கை,தொலைக்காட்சிகளின் அதே சின்னத்தனம்,கேவலம்  இவர்களிடமும் உண்டு. வரிந்து வரிந்து சினிமாகாரர்களை பற்றி போற்றி எழுதி எழுதி அவர்களுக்கு " கூஜா " தூக்கும் அல்பங்களும் இங்கு நிறைய இருக்கிறர்கள். சினிமாவை ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ள இந்த அறிவற்றவர்களுக்கு யார் கற்றுத்தருவது?

இந்த கேவலத்தை எத்தனை பேர் புரிந்து வைத்துள்ளீர்கள்?
                                                                                                                        thank you

மீடியாக்களின் மூளை சலவைSocialTwist Tell-a-Friend

No comments:

Post a Comment