Wednesday, December 14, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சனை

சமீபத்தில் கேரள, தமிழ்நாடு மாநிலங்களிடையே தீப்பற்றி எரியும் மிகப் பெரிய பிரச்சனை - முல்லை பெரியாறு அணை! கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது

இந்த அணை காலாவதியாகிவிட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால், அணையின் சுற்று வட்டாரத்திலுள்ள 5 மாவட்டங்களின் சுமார் 35 லட்சம் மக்களின் மரணத்துக்கு அது வழிவகுக்கும் என்றொரு பீதியினைக் கேரள அரசு முன்வைத்து, உடனடியாக முல்லை பெரியாறுக்குப் பதிலாக வேறு அணை கட்ட வேண்டுமென கோரி வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள், வல்லுனர் குழுக்களின் அறிக்கைகள் போன்ற இன்னபிற தரவுகளை முன்வைத்து, தமிழக அரசு கேரளாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
          
இத்தகைய நிலையில், முல்லை பெரியாறு அணையின் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?, கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு உரிமை தமிழக அரசின் கையில் எப்படி வந்தது?, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் வந்தால் அணை உடையுமா?, அணை உடைந்தால் கேரள அரசு கூறிவருவது போன்ற அதிகப்பட்ச பாதிப்பு ஏற்படுமா? இவ்விஷயத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளின் உண்மையான நிலைப்பாடுகள் என்ன? போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கு இருக்கும்.
கண்டுபிடிப்புகளும் புதிய உருவாக்கங்களும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் மனித குலத்தின் நன்மைக்குமாகவே அமையவேண்டும். ஆனால், அவற்றால் பிரச்சனை ஏற்படும் என்று வந்தால், அதனைத் தீர ஆராய்ந்து மனித வாழ்வுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுவிடவும் தயாராக வேண்டும். இதுவே மனிதகுல நலனில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்களின் அணுகுமுறையாக அமையும்.
அவ்வகையில், நாம் தமிழர்கள்; தமிழக அரசும் அரசியல்வாதிகளும் சொல்வதைத்தான் நம்பவும் செயல்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணமில்லாமல், முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது? அதனால் நன்மையா, தீமையா? என்பதை அலசி உண்மையின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.
            அதற்கு, முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக இரு மாநில அரசுகளின் நிலைப்பாடாக வெளியாகியுள்ள கீழ்கண்ட குறும்படங்கள் பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க, அப்பிரச்சனையின் உண்மை நிலையினை நமக்கு விளக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். பாருங்கள்; சிந்தியுங்கள்; உண்மையின் பக்கம் நிற்கும் முடிவினை எடுங்கள்!

தமிழக பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர்கள் சங்கம் தயாரித்த குறும்படம்.



திரு.சோகன்ராய்(dam999 படத்தின் இயக்குனர்) தயாரித்து, பல்வேறு அவார்டுகளும் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்களும் பெறப்பட்ட குறும்படம்.

ஆங்கிலத்தில்... 
                                                              
முல்லை பெரியாறு அணை பிரச்சனைSocialTwist Tell-a-Friend