ஜெய் ஹிந்த் - ஒவ்வொரு இந்தியனும் முழங்கும் வார்த்தை.........இந்த "ஜெய் ஹிந்த்" வார்த்தைக்கு சரியான பொருள்........"Hail India"...."Victory to India"........"Long live India" என்றும் கொள்ளலாம்........
இதில் முதலில் வரும் "Hail" என்பது "அழைக்கிறது" என்ற பொருள் படும் ஜெர்மானிய வார்த்தை.........இதை "இந்தியா அழைக்கிறது" என்றும் கொள்ளலாம்...."இந்தியாவுக்கு வெற்றி" என்றும் கொள்ளலாம்..........
இந்த வார்த்தையை பிரபல்ய படுத்தியவரை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்........அவர் பெயர் "செம்பகராமன் பிள்ளை"........இவர் ஒரு தமிழர்.......இவரின் தந்தை அக்காலத்தில் "Head Constable" ஆக திருவனந்தபுரத்தில் இருந்தார்.......அப்போது பள்ளிப்பருவத்தில் "Sir Walter Strickland" எனும் பிரிட்டீஷ் பேராசிரியரை கண்டார்.......அவர் இவரை தன்னுடன் பயணிக்க அழைத்தார்...... இவரும் அவருடன் சென்று விட்டார்......
இவரை அந்த பேராசிரியர் ஜெர்மானிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.........அங்கு இவர் தன் படிப்பை முடித்தார்...........பின்பு அங்கேயே பொறியியல் படித்து தேர்ந்தார்......அக்டோபர் 1914 இல் இவர் ஜெர்மனில் இருந்த இந்திய சுதந்திர அமைப்பில் சேர்ந்தார்..........
பின்பு அப்போது இருந்த பிரிட்டீஷ் படையில் வேலை பார்த்து கொண்டு இருந்த இந்தியர்களை.....வெளியேறி வருமாறும் தனிப்படை அமைத்து வெள்ளையர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்றும் கூறினார்....ஜெர்மானியர்கள் இந்திய சுதந்திரத்துக்கு உதவுவதாக வாக்களித்தனர்.....அப்போது வியன்னா வந்த சுபாஷ் சந்திர போஸிடம் தன் திட்டத்தை விவரித்தார்........அவரும் இதற்க்கு இசைந்தார்..........
ஆனால், விதி வேறுவிதமாக இருந்தது........சுயநலமாக முடிவெடுத்தனர் நாஜிக்கள்........உடன்படிக்கை போட்ட ஹிட்லர் சொன்ன விஷயம் என்னவென்றால்.....
"இந்தியர்களுக்கு தங்கள் நாட்டை ஆளும் திறமை இன்னும் வரவில்லை"
இந்த விஷயம் பிள்ளையிடம் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.............ஹிட்லரின் இந்த வார்த்தைக்கு கண்டனம் தெரிவித்து அதை மாற்றிக்கொள்ளுமாறு வற்புறுத்தினார் பிள்ளை..ஒப்பந்தம் என்னவெனில் நாஜிக்கள் இந்திய விடுதலைக்கு உதவுவார்கள்.....இருவருக்கும் பொது எதிரியான பிரிட்டீஷை எதிர்க்க முடிவானது.........இதற்கிடையில் 1931 இல் பெர்லினில் லக்ஷ்மி பாய் எனும் மணிபுரை சேர்ந்த பெண்மணியை திருமணம் முடித்தார்.......
........ நாஜிக்கள் உலகப்போரில் தோற்றதனால் எதுவும் செய்ய முடியாமல் போனார் பிள்ளை........அதே வேலையில் நாஜிக்கள் இவரை தங்கள் எதிரியாக முடிவு செய்து விட்டனர்......நாஜிக்களின் தலைவர் ஹிட்லரின் ஆணையின்படி மே 26, 1934 இல்.......உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.....
அவரின் கடைசி ஆசை தன் உடல் அஸ்தியை.........தான் பிறந்த ஊரில் கரைக்கப்படவேண்டும் என்பதே.........அவர் இறந்த பிறகு அவரின் துணைவி நாஜிக்களின் கொடுமையான அணுகு முறையால் பாதிக்கப்பட்டார்......பல ஆண்டுகளாக பெர்லினிலேயே வாழ்ந்து வந்தார்....ஏனெனில் போஸ் சம்பந்த பட்டவர்கள் சொந்த நாட்டில்(!) தடை செய்யப்பட்டு இருந்தார்கள்(!).........கிட்ட தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு 1966 இல் அன்னாரின் புனித அஸ்தி கொச்சினில் கரைக்கப்பட்டது.....