சமீபத்திய பரபரப்பு படமான ஒசாமாவின் கொலை எல்லா ஊடகங்களிலும் வெற்றிகரமாக ஒட்டப்பட்டது. அந்தப்படத்தை தயாரித்து உலகுக்கு வழங்கிய புதிய தாதா அண்ணன் ஒபாமாவுக்கு எனது மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு கதைக்குள் நுழைவோம். அதாகப்பட்டது அதன் திரைக்கதையின் சிறப்பம்சமே அதிலிருக்கும் அதிபயங்கர மயிர்க்கூச்செரியும் திருப்பங்களுக்கு உதவிய துனைக்கதைகளே!. எல்லா ஹாலிவுட் ஆக்சன் படங்களைப்போலவே..
1. எதிரி நாட்டுக்குள் அவர்கள் ரேடாரில் பார்க்க முடியாத வகையில் நுழைவது. இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு அது யு.எஸ்ல வாங்குனதுதான்.
2. ஹெலிகாப்டரில் இருந்து அதிபயங்கர ஆயுதங்களுடன் இறங்கி வில்லனை வேட்டையாடும் காட்சி. இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு அதற்கு பக்கத்திலேயே ஆர்மி அகாடமி!.
3. வில்லனை கொன்றபின் அவன் உடலை கைப்பற்றியும் சிலரைக் கைது செய்தும் எதிரி நாட்டு ராணுவம் தூங்கி முழிப்பதற்குள் வெளியேறுவதும். இதற்க்கு இடையில் ஒரு சின்ன டுவிஸ்ட்டு ஒரு ஹெலிகாப்டர் வேற ஒர்க் ஆகல.
4. வில்லனை கடலில் தூக்கி போடுவது. இனி ஒசாமாவே நெனச்சாலும் அவரோட பாடிய கண்டுபிடிக்க முடியாது!
நிற்க...
ஒசாமாவை கொல்றது ரொம்ப ஈசிங்க, ஒபாமா, நீங்க, நானு அல்லது யாரும் கொன்னுடலாம். எப்புடின்னு முழிக்காதீங்க மேலே இருக்கிற மூன்று ஒசாமா படத்தில் முதலில் இருப்பது அவர் எப்போதோ பேசியபோது எடுத்த படம். மூன்றாம் படம் போட்டோ ஷாப்பின் ஆரம்பம். நடுவில் இருப்பதுதான் எல்லா ஊடகங்களாலும் காட்டப்பட்ட படம்.
இங்க இருக்கிற மூக்கையும், உதடுகளையும் நல்லாப் பாருங்க.
எதிர்கருத்துக்கள் வரத்துவங்கியவுடன் அமெரிக்கா
ஒசாமா பின்லேடன் படத்தை வெளியிடப் போவதில்லை என்று
கூறி விட்டது.
ஒண்ணுமே புரியல உலகத்திலே...
என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...
thankyou,