Wednesday, December 14, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சனை

சமீபத்தில் கேரள, தமிழ்நாடு மாநிலங்களிடையே தீப்பற்றி எரியும் மிகப் பெரிய பிரச்சனை - முல்லை பெரியாறு அணை! கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது

இந்த அணை காலாவதியாகிவிட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால், அணையின் சுற்று வட்டாரத்திலுள்ள 5 மாவட்டங்களின் சுமார் 35 லட்சம் மக்களின் மரணத்துக்கு அது வழிவகுக்கும் என்றொரு பீதியினைக் கேரள அரசு முன்வைத்து, உடனடியாக முல்லை பெரியாறுக்குப் பதிலாக வேறு அணை கட்ட வேண்டுமென கோரி வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள், வல்லுனர் குழுக்களின் அறிக்கைகள் போன்ற இன்னபிற தரவுகளை முன்வைத்து, தமிழக அரசு கேரளாவின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
          
இத்தகைய நிலையில், முல்லை பெரியாறு அணையின் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?, கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு உரிமை தமிழக அரசின் கையில் எப்படி வந்தது?, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் வந்தால் அணை உடையுமா?, அணை உடைந்தால் கேரள அரசு கூறிவருவது போன்ற அதிகப்பட்ச பாதிப்பு ஏற்படுமா? இவ்விஷயத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகளின் உண்மையான நிலைப்பாடுகள் என்ன? போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கு இருக்கும்.
கண்டுபிடிப்புகளும் புதிய உருவாக்கங்களும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் மனித குலத்தின் நன்மைக்குமாகவே அமையவேண்டும். ஆனால், அவற்றால் பிரச்சனை ஏற்படும் என்று வந்தால், அதனைத் தீர ஆராய்ந்து மனித வாழ்வுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுவிடவும் தயாராக வேண்டும். இதுவே மனிதகுல நலனில் உண்மையாகவே அக்கறையுள்ளவர்களின் அணுகுமுறையாக அமையும்.
அவ்வகையில், நாம் தமிழர்கள்; தமிழக அரசும் அரசியல்வாதிகளும் சொல்வதைத்தான் நம்பவும் செயல்படுத்தவும் வேண்டுமென்ற எண்ணமில்லாமல், முல்லை பெரியாறு பிரச்சனையில் உண்மையிலேயே நியாயம் யார் பக்கம் உள்ளது? அதனால் நன்மையா, தீமையா? என்பதை அலசி உண்மையின் பக்கம் நாம் நிற்க வேண்டும்.
            அதற்கு, முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக இரு மாநில அரசுகளின் நிலைப்பாடாக வெளியாகியுள்ள கீழ்கண்ட குறும்படங்கள் பாரபட்சமில்லாமல் முடிவெடுக்க, அப்பிரச்சனையின் உண்மை நிலையினை நமக்கு விளக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். பாருங்கள்; சிந்தியுங்கள்; உண்மையின் பக்கம் நிற்கும் முடிவினை எடுங்கள்!

தமிழக பொதுப்பணித் துறையின் மூத்தப் பொறியாளர்கள் சங்கம் தயாரித்த குறும்படம்.



திரு.சோகன்ராய்(dam999 படத்தின் இயக்குனர்) தயாரித்து, பல்வேறு அவார்டுகளும் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்களும் பெறப்பட்ட குறும்படம்.

ஆங்கிலத்தில்... 
                                                              
முல்லை பெரியாறு அணை பிரச்சனைSocialTwist Tell-a-Friend

Friday, May 27, 2011

கம்ப்யூட்டர் பிரச்சனைகளுக்கு தீர்வு

Task Manager!


உங்கள் கணணி வேகமாக இயங்கவில்லையா?கணனியின்  புரோகிராம்கள் வேலை செய்யாமல்  பின்னர் மீண்டும் வேலை செய்கின்றதா?
இதனால் நீங்கள்  அவசரப்பட்டு கணணியை மீண்டும் பூட் செய்ய முயற்ச்சி செய்வீர்கள். அணி நீங்கள் பூட் செய்ய தேவையில்லை. இந்த வகை சிக்கலுக்கு விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் மேனேஜர் மூலம் கணணியில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ப்ராசசர் இயக்கம் மற்றும் பயன்படுத்தப்படும் சேவைகளைக் காணலாம்.
கணணியின் திறனை இதன் மூலம் கண்காணித்து நம் கட்டளைக்கு இணங்காத புரோகிராம்களை மூடலாம். நெட்வொர்க்கில் கணணியில் இணைக்கப்பட்டு இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பயனாளர்களின் செயல்பாடுகளைக் காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரே நேரத்தில் எத்தனை புரோகிராம்களையும் இயக்கலாம். கணணியில் உள்ள மெமரி மற்றும் ப்ராசசர் திறன் அளவு தான் ஏத்தனை புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் என்பதனை வரையறை செய்திடும்.
விண்டோஸ் இயக்கமானது எப்போது எந்த செயலுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனால் இயங்க முடியாமல் போகும் போது திடீரென முடங்குகிறது. இந்த வேளையில் தான் நாம் டாஸ்க் மானேஜரின் உதவியை நாடலாம்.
பல வழிகளில் டாஸ்க் மானேஜரை இயக்கலாம். CTRL-SHIFT-ESC அழுத்தலாம். CTRL-ALT-DEL அழுத்திப் பின்னர் START TASK MANAGER இயக்கலாம் அல்லது டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் START TASK MANAGER தேர்ந்தெடுக்கலாம்.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் எந்த டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கீழாக கார் ஒன்றின் முன்பகுதி போர்டு போல தோற்றத்தில் ஓர் இடம் காட்டப்படும். அதில் எத்தனை இயக்கம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, ப்ராசசரின் திறனில் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மெமரியின் அளவில் பயன்படுத்தப்படும் இடம் ஆகியன காட்டப்படும்.
டாஸ்க் மானேஜரின் முக்கிய விண்டோவில் APPLICATIONS, PROCESSES, SERVICES, PERFORMANCE, NETWORKING, AND USERS ஆகிய டேப்கள் காட்டப்படும். இவற்றில் APPLICATIONS, PROCESSES, SERVICES ஆகிய டேப்கள் தான் நாம் கணணியில் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கொண்டிருக்கின்றன.
முதல் முதலாக டாஸ்க் மேனேஜரைத் திறக்கும் போது APPLICATIONS டேப் நமக்குக் காட்டப்படும். கணணியில் இயக்கப்பட்டு டாஸ்க்பாரில் காட்டப்படும் புரோகிராம்கள் இதில் காட்டப்படும். சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டுள்ள சிஸ்டம் புரோகிராம்கள்(எ.கா. மைக்ரோசாப்ட் சிஸ்டம் எசன்சியல்ஸ்,யாம்மர் போன்றவை) இந்தப் பட்டியலில் காட்டப்படமாட்டாது.
ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும் என்றால் அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்து மெனுவில் உள்ள END TASK பிரிவில் கிளிக் செய்தால் போதும். ஆனால் அப்ளிகேஷன் டேப்பில் மிக முக்கியமானது அதில் உள்ள STATUS பிரிவாகும். இதன் மூலம் புரோகிராம் ஒன்று முறையாக இயங்கிக் கொண்டிருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய கட்டளைக்கு எந்த சலனமும் காட்டாத புரோகிராம்கள் “NOT RESPONDING” எனக் காட்டப்படும். இது போன்ற இயக்கத்தை நிறுத்திக் கொண்ட புரோகிராம்களை அதன் வலது மூலையில் உள்ள எக்ஸ் அழுத்தி முடிவிற்குக் கொண்டு வர முடியாது. அந்த நேரத்தில் டாஸ்க் மேனேஜர் மூலம் புரோகிராமினை நிறுத்தலாம்.
டாஸ்க் மேனேஜரின் இதயத் துடிப்பு PROCESSES டேப் பிரிவில் தான் உள்ளது. புரோகிராம்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த டேப்பில் கிடைக்கும் பிரிவுகளே நமக்கு அதிகம் பயன்படுகின்றன.
இதன் மாறா நிலையில் IMAGE NAME (செயல்பாட்டில் உள்ள கோப்புகள் பெயர்கள்), USER NAME (பயனாளர் பெயர் அல்லது சிஸ்டம் செயல்முறை), CPU (ப்ராசசர் செயல்பாட்டில் எத்தனை விழுக்காடு பயன்பாட்டில் உள்ளது), MEMORY (செயல்முறை ஒன்று எந்த அளவு RAM மெமரியைப் பயன்படுத்துகிறது என்ற தகவல்) மற்றும் DESCRIPTION (ஒரு செயல்முறை என்ன என்பதைப் பற்றிய சிறு விளக்கம்) ஆகிய பிரிவுகள் காட்டப்படுகின்றன.
இதில் மேலாக உள்ள பிரிவுகளின் டேப்பில் கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். பயனாளர் எனில் அகர வரிசைப்படுத்தப்படும். மெமரி பயன்பாடு எனில் அதிக அல்லது குறைவாக மெமரியினைப் பயன்படுத்தும் புரோகிராம்களிலிருந்து வரிசைப்படுத்தப்படும்.
கணணி மிகவும் குறைவான வேகத்தில் இயங்கினால் அல்லது நம் கட்டளைகளைச் செயல்படுத்தாமல் இருந்தால் மெமரி டேப் கிளிக் செய்து ஏதேனும் ஒரு புரோகிராம் வழக்கத்திற்கு மாறாக அதிக மெமரியைப் பயன்படுத்தியது தெரியவந்தால் அங்கே தான் பிரச்னை உள்ளதை அறிந்து அதன் இயக்கத்தினை இங்கேயே மூடலாம். இதே முறையில் சி.பி.யு பிரிவையும் கையாண்டு உண்மை நிலையை அறியலாம்.
இதே போல SERVICES டேப் மூலம் சில வகை சேவைகள் நிலை குறித்து அறியலாம். இங்கு இரண்டு ஆப்ஷன்கள் தரப்படும். STOPPED OR RUNNING இயங்கும் சர்வீஸை நிறுத்தலாம். நிறுத்தப்பட்டிருப்பதைத் தொடங்கலாம்.
பிரச்னைகள் ஏற்படுகையில் ஒவ்வொரு இயங்கும் சர்வீஸை நிறுத்தி பிரச்னை தீர்கிறதா எனக் கண்காணிக்கலாம். எதனை நிறுத்துகையில் பிரச்னை தீர்க்கப்பட்டு கணணி வழக்கமான இயக்கத்திற்கு வருகிறதோ அந்த சர்வீஸை நிறுத்திவிட்டு அதனை மீண்டும் நிறுவச் செய்திடலாம் அல்லது புதியதாய்த் தொடங்கலாம்.
தங்களின் மேலான ஆதரவு கண்டு என் பயணம் தொடரும்.
                                                                                                                                                                                                                      நன்றி...

கம்ப்யூட்டர் பிரச்சனைகளுக்கு தீர்வுSocialTwist Tell-a-Friend

Friday, May 20, 2011

ஜெய்ஹிந்த்

 ஜெய் ஹிந்த் - ஒவ்வொரு இந்தியனும் முழங்கும் வார்த்தை.........இந்த "ஜெய் ஹிந்த்" வார்த்தைக்கு சரியான பொருள்........"Hail India"...."Victory to India"........"Long live India" என்றும் கொள்ளலாம்........

இதில் முதலில் வரும் "Hail" என்பது "அழைக்கிறது" என்ற பொருள் படும் ஜெர்மானிய வார்த்தை.........இதை "இந்தியா அழைக்கிறது" என்றும் கொள்ளலாம்...."இந்தியாவுக்கு வெற்றி" என்றும் கொள்ளலாம்..........
இந்த வார்த்தையை பிரபல்ய படுத்தியவரை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்........அவர் பெயர் "செம்பகராமன் பிள்ளை"........இவர் ஒரு தமிழர்.......இவரின் தந்தை அக்காலத்தில் "Head Constable" ஆக திருவனந்தபுரத்தில் இருந்தார்.......அப்போது பள்ளிப்பருவத்தில் "Sir Walter Strickland" எனும் பிரிட்டீஷ் பேராசிரியரை கண்டார்.......அவர் இவரை தன்னுடன் பயணிக்க அழைத்தார்...... இவரும் அவருடன் சென்று விட்டார்......

இவரை அந்த பேராசிரியர் ஜெர்மானிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.........அங்கு இவர் தன் படிப்பை முடித்தார்...........பின்பு  அங்கேயே பொறியியல் படித்து தேர்ந்தார்......அக்டோபர் 1914 இல் இவர் ஜெர்மனில் இருந்த இந்திய சுதந்திர அமைப்பில் சேர்ந்தார்..........
பின்பு அப்போது இருந்த பிரிட்டீஷ் படையில் வேலை பார்த்து கொண்டு இருந்த இந்தியர்களை.....வெளியேறி வருமாறும் தனிப்படை அமைத்து வெள்ளையர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்றும் கூறினார்....ஜெர்மானியர்கள் இந்திய சுதந்திரத்துக்கு உதவுவதாக வாக்களித்தனர்.....அப்போது வியன்னா வந்த சுபாஷ் சந்திர போஸிடம் தன் திட்டத்தை விவரித்தார்........அவரும் இதற்க்கு இசைந்தார்..........

ஆனால், விதி வேறுவிதமாக இருந்தது........சுயநலமாக முடிவெடுத்தனர் நாஜிக்கள்........உடன்படிக்கை போட்ட ஹிட்லர் சொன்ன விஷயம் என்னவென்றால்.....
"இந்தியர்களுக்கு தங்கள் நாட்டை ஆளும் திறமை இன்னும் வரவில்லை" 

இந்த விஷயம் பிள்ளையிடம் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.............ஹிட்லரின் இந்த வார்த்தைக்கு கண்டனம் தெரிவித்து அதை மாற்றிக்கொள்ளுமாறு வற்புறுத்தினார் பிள்ளை..ஒப்பந்தம் என்னவெனில் நாஜிக்கள் இந்திய விடுதலைக்கு உதவுவார்கள்.....இருவருக்கும் பொது எதிரியான பிரிட்டீஷை எதிர்க்க முடிவானது.........இதற்கிடையில் 1931 இல் பெர்லினில்  லக்ஷ்மி பாய் எனும் மணிபுரை சேர்ந்த பெண்மணியை திருமணம் முடித்தார்.......

........ நாஜிக்கள் உலகப்போரில் தோற்றதனால் எதுவும் செய்ய முடியாமல் போனார் பிள்ளை........அதே வேலையில் நாஜிக்கள் இவரை தங்கள் எதிரியாக முடிவு செய்து விட்டனர்......நாஜிக்களின் தலைவர் ஹிட்லரின் ஆணையின்படி மே 26, 1934 இல்.......உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.....
அவரின் கடைசி ஆசை தன் உடல் அஸ்தியை.........தான் பிறந்த ஊரில் கரைக்கப்படவேண்டும் என்பதே.........அவர் இறந்த பிறகு அவரின் துணைவி நாஜிக்களின் கொடுமையான அணுகு முறையால் பாதிக்கப்பட்டார்......பல ஆண்டுகளாக பெர்லினிலேயே வாழ்ந்து வந்தார்....ஏனெனில் போஸ் சம்பந்த பட்டவர்கள் சொந்த நாட்டில்(!) தடை செய்யப்பட்டு இருந்தார்கள்(!).........கிட்ட தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு 1966 இல் அன்னாரின் புனித அஸ்தி கொச்சினில் கரைக்கப்பட்டது.....

கொசுறு: நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய பலர் இவ்வாறு தன் தாய் நாட்டு மனிதர்களாலேயே புறக்கணிக்கப்படுவதை என்ன சொல்வது......! படங்களுக்கு நன்றி Google.com......தகவல்களுக்கு Wikipedia.com க்கு நன்றி..........விக்கி குமாருக்கு நன்றி...
                                                                                                                                        நன்றியுடன்...

ஜெய்ஹிந்த்SocialTwist Tell-a-Friend

ரஜினி


ரஜினிக்கு என்ன பிரச்சினை…?

சிகர்கள் என்றில்லை, இந்தியா முழுக்க கடந்த வாரம் இதுவும் ஒரு முக்கிய கேள்வியாக இருந்தது. இந்த வாரம் எல்லா நிகழ்வுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தக் கேள்வியே பிரதானமாக நின்றது.
உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, ‘தலைவருக்கு..’ என ஆரம்பிக்கும்போதே தழுதழுத்தனர். ‘இப்போதே சென்னைக்கு கிளம்புகிறோம். தலைவரைப் பார்க்காமல் போகப் போவதில்லை,’ என ஆவேசப்பட்டனர்.
நமக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்தினாலும், இந்த விசாரிப்புகள் முடிவற்று தொடர்வதைத் தவிர்க்க, ரஜினியின் உடல் நிலை குறித்து நாம் அறிந்த, மருத்துவர்கள் மூலம் தெரிந்து கொண்ட சில விஷயங்களை ஒரு கட்டுரையாகத் தர முடிவெடுத்து, தயார் செய்தும் வைத்திருந்தோம்.

இந்த நிலையில்தான் இன்று காலை, மிகுந்த அதிர்ச்சியூட்டும் வகையில் வதந்திகளைப் பரப்பிவிட்டிருந்தனர் விஷமிகள் சிலர். அதைக் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட செயலிழந்து நின்றனர் என்றால் மிகையல்ல. உடனே இதுகுறித்து திருமதி லதா ரஜினி மற்றும் ரஜினி இல்லத்தில் உள்ள அலுவலக நிர்வாகிகளிடம் பேசினோம். தலைவருக்கு என்ன நடக்கிறது என்பதை மூடி வைப்பதால் ரசிகர்கள் படும் பாட்டையும் சற்று விரிவாகவே விளக்கினோம்.

ஏற்கெனவே கொந்தளிப்பான சூழல் உள்ள நிலையில் ரஜினிக்கு என்ன மாதிரியான உடற்கோளாறுகள் உள்ளன என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் வெளியிடாமல் இருப்பதே நல்லது என்றும், மருத்துவ சோதனைகளின் முடிவுகள் வந்தபிறகு வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டதால், இப்போது வெளியிடுகிறோம்.
முதல்கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்துவிட்டன:

ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு ரஜினிக்கு எந்த ஆபத்துமில்லை!
ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார். இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு. அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.
நுரையீரல் பிரச்சினை…

ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, Chronic Obstructive  என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் அதிகளவு தேங்குகிறது. இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர். அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு.

சிறுநீரகப் பிரச்சினை…

ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸீரம் க்ரியேட்டினைன் டெஸ்டில், அவருக்கு ரத்தத்தில் க்ரியேட்டினைன் அளவு அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். நோய்த் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.
ஆனால் இது மிக ஆரம்ப நிலை (மூன்றாம்) என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டாவது மற்றும் முதல் நிலை கோளாறுதான் ஆபத்தானவை. ரஜினிக்கு அந்தப் பிரச்சினை இல்லை.
                                                                    இப்போது அடுத்து தரப்பட்டுள்ள Culture test முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். பொதுவாக, முதல்கட்ட சோதனைகளில் ஒன்றும் சிக்கல் இல்லை என்று முடிவு வந்துவிட்டதால், கல்ச்சர் டெஸ்ட் முடிவும் கூட அதையொட்டியதாகவே இருப்பது வழக்கம் (எனது உடன்பிறந்த சகோதரி மற்றும் அவரது கணவர் இருவருமே சென்னை அரசு மருத்துவமனை நிபுணர்கள் என்பதால் இதனை உறுதியாகச் சொல்கிறோம்.)
என்ன சொல்கிறார் ஆய்வக நிபுணர்…?
                                 இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் மைக்ரோபயாலஜி ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும் நமக்கு மிக நெருங்கிய மருத்துவ நிபுணர் இப்படிக் கூறுகிறார்:


“கடந்த இரு தினங்களாக, ‘விவிஐபியின் சாம்பிள் இவை. மிகுந்த அக்கறையுடன் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்’, எனக் கூறியபடி ரத்தம், சிறுநீர், சளி உள்ளிட்ட சாம்பிள்களைக் கொண்டு வந்தனர். யாராக இருக்கும் என்று பார்த்தபோதுதான் அது ரஜினி சார் என்று தெரிய வந்தது (சிவாஜிராவ் எனும் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளார்!).

நாங்கள் எடுத்த முதல் கட்ட சோதனையின் முடிவில், பயப்படும்படி அவருக்கு ஒன்றுமில்லை என தெரிய வந்துள்ளது. நீண்ட நாள் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு வருகிற பிரச்சினைதான் இது. சீக்கிரமே சரி செய்துவிடலாம்.
 அவர் மிகவும் நார்மலாக உள்ளார். தனக்கான வேலைகளை யாருடைய உதவியுமின்றி செய்து கொள்கிறார்.
நாளை கல்ச்சர் டெஸ்ட் முடிவும் வந்துவிடும் (குறைந்தது 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் பிடிக்கும் இந்த சோதனை முடிவு தெரிய!). இந்த ரிசல்டில், ரஜினியின் உள்ளுறுப்புகளைத் தாக்கியுள்ள கிருமியின் தன்மை தெரிந்துவிடும். சிகிச்சை அளிப்பது இன்னும் சுலபமாகிவிடும். அதன்பிறகு அவர் வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்தால் போதும்”, என்றார்.
உற்சாக ரஜினி’ – இரண்டாவது செய்திக் குறிப்பு

ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், “பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கவலை வேண்டாம்…

எனவே இப்போது ரஜினிக்கு நுரையீரல் நோய்த் தொற்று, ப்ளாஸ்மா திரவ தேக்கம் மற்றும் ரத்தத்தில் கிரியேட்டினைன் அளவு அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. இதற்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மற்ற தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பான வசதிகள் கொண்டது ராமச்சந்திரா என்பதால், இந்த பிரச்சினைகளை இங்குள்ள மருத்துவ நிபுணர்களே சரிசெய்து விடுவார்கள். தலைவரும் நலமுடன் இந்த வார இறுதியில் வீடு திரும்பிவிடுவார்.

இடையில் அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்த நிர்வாகி பார்த்தார் என்றெல்லாம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையில்லாமல் யாரிடமும் தகவல் விசாரிக்கவும் தேவையில்லை. நமக்கே இவ்வளவு பதட்டம் எனும்போது, சரியான தகவல் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியாமல், ரஜினியின் உடல்நிலையையும் கவனித்துக் கொள்ளும் அவரது குடும்பத்தினரை விசாரிப்பு என்ற பெயரில் ரசிகர்களும் துன்பப்படுத்த வேண்டாமே.

தலைவர் தொடர்பான எந்த சிறு நிகழ்வாக இருந்தாலும் அதை தவறாமல் சொல்ல நாமிருக்கிறோம். கவலை வேண்டாம்.

அமைதியான பிரார்த்தனை…

அதேபோல, உங்கள் பிரார்த்தனைகளை அமைதியாக, யாருக்கும் தெரியாத வகையில் மேற்கொள்ளுங்கள். காரணம், விளம்பரமற்ற ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளைக் கேட்க ஆண்டவன் செவிகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

மேலும் பிரார்த்தனை, வழிபாடு எனும் பெயரில் ரசிகர்கள் கிளப்பும் பரபரப்பே மக்கள் மத்தியில் பற்பல யூகங்களுக்கு வித்திடவும் வாய்ப்புள்ளது.
தலைவர் இன்னும் ஓரிரு தினங்களில் நலமுடன் உங்கள் முன் சின்னத்திரையில் தோன்றுவார். அதற்குப் பிறகு பெரிய திரையிலும் கலக்குவார். அதற்கான பூரண ஓய்வு இது என்று எடுத்துக் கொள்வோம்!
                                                                                                                                            நன்றி
                  
ரஜினிSocialTwist Tell-a-Friend

Thursday, May 12, 2011

funny-political-moments-part-3






















                                                                                                                                   Thankyou


funny-political-moments-part-3SocialTwist Tell-a-Friend